Monday, 16 February 2026

69


 69

நுண் கதைகள்


உயிர்மை பதிப்பகம்


விலை ரூ.80


Saravanakarthikeyan Chinnadurai 


69 கதைகள். ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கும்போது ஒவ்வோர் உணர்வு. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்பற்ற ஒவ்வொரு களத்தில். சொற்களில், சொன்ன விதத்தில் ஜொலித்திருக்கிறார். கவிதைப் புத்தகங்களுக்கு அணிந்துரை, விமர்சனம் செய்பவர்கள் உரைப்பார்கள், எதை மேற்கோள் காட்ட, எதைத் தவிர்க்க என்றில்லாதபடி எல்லாம் அருமையாக. அது வழக்கம்போல உட்டாலக்கடி வேலை. இந்தக் கதைகள் அப்படிப் பட்டவையல்ல. உள்ளபடி சிறப்பு என்பதை உள்ளே உள்ளதை படித்துப் பார்த்தால் சிலிர்த்து உணர முடியும்.


காமம் மட்டுமல்ல. காதல் இருக்கிறது. அன்பு இருக்கிறது. சொல்ல இயலாமல் கடக்கும் சம்பவம் இருக்கிறது. க்ரைம் வகையான கதைகளும் இருக்கிறது. சுவாரஸ்யம் குறைக்காமல் வாசிக்கத் தூண்ட வைக்கிறார் கதாசிரியர். இன்னமும் 69 என்பதற்கே விளக்கம் தெரியாமல் பலர் இருக்கும்போது அதையே கதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்துக்கொண்டு எழுத்துச் சிலம்பம் சுழற்றியிருக்கிறார். இதைத்தான் பொதுவெளியில் எழுதவேண்டும் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார். வாசிப்பை நேசிக்கும் ஒருவன் கதையால் உண்டாக்கிக்கொள்ளும் கிளர்ச்சியை கதையின் உள்ளேயே படரச் செய்கிறார்.


“அப்புறமாப் பேசுறேன். பிரியாணி சூடா இருக்கு!”


வாழ்த்துகள் தோழர்.


❣️

No comments:

Post a Comment