கவிஞர் தமிழ் ஒளி
சிகரம் ச.செந்தில்நாதன்
பாரதி புத்தகாலயம்
பக்கம் 16
படைப்பாளி தமிழ் ஒளி குறித்த அறிமுகத்திற்கு இந்நூல் உதவும். திராவிட சித்தாந்தத்தில் இருந்தவர். மார்க்சிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளர் அமைப்பிற்குள் வந்து பொறுப்பேற்று செயல்பட்டவர். பட்டுக்கோட்டையின் சம காலத்தவர். பாரதி தாசனால் தமிழ் ஒளி என பெயர் சூட்டப்பட்டவர். தந்தைக்கு பூர்வீகம் புதுவை. இவர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஒன்பது காவியங்கள், நான்கு கவிதை நூல்கள், நான்கு ஆய்வு நூல்கள், நான்கு கதைத் தொகுதிகள், இரண்டு குறு நாவல்கள், ஒரு வரலாற்று நூல், நான்கு நாடகங்கள் எழுதியவர். குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் கை தேர்ந்தவர். சிறந்த விமர்சகர். வறுமையால் மிகக் குறுகிய ஆயுள் காலத்தில் மறைந்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களின் குரலாக படைப்புகளில் ஒலித்தவர். இவர் குறித்த பல தகவல்கள் கிடைக்கவில்லை என நூலாசிரியர் கூறுகிறார். 1949லேயே முன்னணி என்ற இதழில் மே தினமே வருக என்ற தலைப்பில் 6 பக்கங்கள் கவிதை எழுதியுள்ளார். பிறப்பு 21.09.1924. இறப்பு 23.03.1965. பெரும்பாலான தகவல்கள் நூலில் முழுமையாக இல்லை. இவர் குறித்த முழுமையான ஆய்வு நடந்தால் இன்னும் இவரின் மேலான ஆளுமை புலப்படும் என நம்பலாம்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment