ரோஸ்
ஆயிசா இரா.நடராசன்
Books for children பதிப்பகம்
64 பக்கங்கள்
முழுக்க உரையாடல்களால் நிரம்பிய நூல். அப்பொழுது அவன் பேசினான், சூரியன் கண் விழித்தது, பைக்கில் வேகமாகச் சென்றான், அவள் அமைதி வெயிலற்ற வான் போலிருந்தது என்றெல்லாம் வார்த்தைகளில்லை. முழுக்க உரையாடல்கள் தாம். தேவா என்பவன் பள்ளிச் சிறுவன். வீட்டில் செடியில் பூத்திருக்கும் ரோஜாவைப் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால் வீடு அதற்கு எவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறது, பள்ளிப் பாடங்களை முடிக்க வைக்க பெற்றோர் காட்டும் அதீத அழுத்தம் கடந்தும் தேவாவின் ஆசை ரோஜாவில் தான் இருக்கிறது. பள்ளிக்குக் கிளம்பும் பொழுதிலும், வழியிலும், பள்ளியின் ஒவ்வொரு பாடவேளையின்போதும் ரோஜா குறித்த ஏதோ ஒன்று தேவாவைப் பேச வைக்கிறது. ஆனால் எல்லாச் சூழலிலும் அவன் கேள்விகள் அடுத்தகட்டமாகச் செல்ல பெற்றோரும், எந்த ஆசிரியரும் அனுமதிப்பதில்லை. அவன் விருப்பங்கள் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவனின் குழந்தைமையை பள்ளியும் பாடத் திட்டமும் பிள்ளையின் எதிர்காலம் என்று சொல்லி பெற்றோரும் காவு வாங்குகிறார்கள். யார் தேவா போன்ற குழந்தையின் ஆசையைக் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்பதை கதையின் மூலமாகக் கேள்வி கேட்கிறார் ஆயிசா இரா.நடராசன். ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
வாழ்த்துகள் தோழர்.
❣️

No comments:
Post a Comment