அக்னித் திருப்பங்கள்
தமிழ்தாசன் வெற்றிமொழி
Vetrimozhi Veliyeetagam
பக்கம் 88
நாடகம்
எப்போதோ வாங்கிய நூல். வழக்கம்போல சோம்பேறித்தனம். இன்று தான் வாசித்தேன். அருமையான நாடக நூல். மேடையேற்றுவதற்குப் பொருத்தம். முற்போக்குக் கருத்துகள் நிரம்பி வழிகிறது.
சுப்பிரமணி ஐயர் ஆச்சாரம் பார்ப்பவர். அவர் மகன் உமா சுதன் முற்போக்கான மனிதன். மகளுக்கு திருமணம் முடிக்க தங்க நகைக்காக ஒருவனிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார். ஆனாலும் மகள் திருமணம் முடிகிறது. செல்லுமிடத்தில் வரதட்சணை வாங்கி வராததால், மாமியாரிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறாள். கணவன் குடிகாரன். இச்சூழலில் உமாசுதன் பிழைப்பிற்காக வெட்டியானாக மாறுகிறான். ஒரு கட்டத்தில் மகள் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்கிறாள். உமா சுதனின் நண்பன் அண்ணாமலை பட்டியல் இனத்தில் பிறந்து அர்ச்சகராக மாறுகிறான். சுப்பிரமணி ஐயர் மகள் வாழ்க்கை என்னானது? அவரின் மகள் சுமித்ரா மீண்டும் கணவன் வீடு சென்றாளா? உமா சுதனை அவனின் தாய் சந்தித்த இடம் எங்கே? இவர்களுக்கும் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை சாதி, மதம் தொடர்பான கருத்துகளோடு நாடகமாக்கி உள்ளார் தோழர்.
தொடர்ந்து படைப்புகள் வெளியிட வாழ்த்துகள்.
❣️

No comments:
Post a Comment