பாவக் கதைகள்
கௌதம் வாசுதேவ் இயக்கம்.
கௌதம், சிம்ரன், இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். அமைதியான வாழ்க்கை. வயதுக்கு வராத இளைய மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். போலீசுக்கு செல்வதா வேண்டாமா என குழப்பம். பின் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். மகன், இப்படிச் செய்தவன் யாராக இருக்கும் என நண்பனுடன் சேர்ந்து தேடுகிறான். ஒரு கட்டத்தில் மகளைக் கொன்றுவிட தாய் நினைத்து சில பல யோசனைக்குப் பிறகு கற்பு என்பது மயிருக்குச் சமம். அவள் படித்து பெரியாளா வருவா. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நல்ல முடிவை எடுக்கிறாள். மகன் பாலியல் வல்லுறவு செய்தவனைக் கண்டுபிடித்தானா அவனுக்கு தண்டனை கொடுத்தானா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
வான்மகள்
நம்பிக்கை...!
விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா இயக்கிய பாவக்கதைகள் பார்த்தேன்.
சாதி ஆணவப் படுகொலை, லெஸ்பியன் குறித்த காட்சிகளோடு விக்னேஷ் சிவன் படம் அருமை. கொலை செய்யத் துணிந்தபின் வருகின்ற காட்சிகள் பெரும் பதட்டத்தை மனதிற்குள் உண்டுபண்ணின. லெஸ்பியன் என்பதை நிரூபிக்க முத்தக் காட்சி! கடைசியில் குறிப்பாக அந்த குட்டி மனிதனை அவன் கூறிய சொல்லால் அவனையே திட்டும் இடம் செம. விச தே... பையா. அதை வில்லன் சொல்லிச் சிரிக்கிறான். அவனுக்கும் இது பொருத்தம் தான்.
திருநங்கைகளின் ஆசைகள், அவர்களின் மேலான சமூகப் பார்வை குறித்த சுதா கொங்காரா படம். திருநங்கையாக நடித்தவர் சிறப்பாகச் செய்திருந்தார். வெற்றிலை மெல்லல் அவ்ளோ அழகு. மதம் கடந்த திருமணம், அவர்கள் அடையும் இன்னல்கள், பெற்றவர்கள் மனம் திருந்தியதாக நினைத்து ஊர் வந்து ஏமாந்து திரும்புதல் என காட்சிகள். பாடல் சுகம். அருமை...
பாவக் கதைகள்
வெற்றிமாறன் இயக்கிய பகுதியைப் பார்த்தேன். சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்த்த ஊருக்கு அழைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். மகளும் மருமகனும் அருமையான வாழ்வை வாழ்கிறார்கள். அதை கண்ணெதிரே காண்கிறார் தந்தை அதுவும் அவ்வாழ்வை பிரகாஷ்ராஜ் குடும்பம் இதுவரை அனுபவித்திராத நிலையில். அழைத்து வரப்பட்ட மகள் படிப்பு சுதந்திரம் தரும், நல்வாழ்க்கை தரும் என்று தங்கைகளிடம் கூறுகிறார். குடும்பத்தினர் அனைவருடனும் இரவில் உணவு உண்கிறார். இடையில் மகளுக்கு விக்கும்போது தண்ணீர் கொண்டுவரச் செல்லும் தந்தை அதில் விசம் கலந்து மகளுக்கு கொடுக்கிறார். இரவில் குடும்பத்தினர் அனைவரையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு மகள் வாந்தி எடுப்பதையும், இரத்தம் கக்குவதையும் பார்த்து சாகும் வரை வேடிக்கை பார்க்கிறார். எதிர்த்துப் பேசும் மனைவியை அடித்து வேறொரு அறையில் பூட்டி விடுகிறார். மறுநாள் மருமகன் வந்து வில்லங்கம் நடப்பது, ஊர் கூடுவது, வழக்கு என்பதெல்லாம் ஓவியமாக எழுத்தாக திரையில் தெரிகிறது.
எதைச் சொல்ல விழைகிறார் வெற்றிமாறன் என்பது புரியவில்லை. இப்படி செய்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்த இந்த கால கட்டத்தில் அவசியம் என்ன வந்தது. அதற்கு தீர்வு என்ன என்பதை எழுத்துகள் போட்டு நீதி சொல்வதை எத்தனை பேர் பார்ப்பார்கள்... அசுரனில் கல்வி எனும் தீர்வு சொன்ன வெற்றிமாறன் இப்படி சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஏமாற்றி அழைத்து வந்து இப்படிப் பிரிக்கலாம் என்கிறாரா... பாவக் கதைகள் என்னும் தலைப்புக்கு நியாயம் செய்ய இதை மட்டும் காட்சிப் படுத்தினால் போதும் என நினைத்து விட்டாரா...
பெருத்த ஏமாற்றம்.

No comments:
Post a Comment